சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியதாவது:-

மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சிதான் சிங்கப்பெண் சிறப்பு படையைத் தொடங்க்கி வைக்கும் நிகழ்வு.

நம்ம பாட்டி, அக்கா, தங்கை, பெண் குழந்தைகள் இவங்க எல்லாத்துக்குமான பாதுகாப்பை உறுதி செய்வோம்னு சொன்னோம்.

அது எலெக்‌ஷனுக்கான வாக்குறுதி அல்ல. மனசுல இருந்து உணர்வுப்பூர்மா சொன்னோம்.

சொன்னதை எல்லாம் செய்யணும். படிப்படியா கொஞ்சம் கொஞ்சமாக செயல்ல கொண்டு வருவோம்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை மேற்கொள்வதற்கான முதல் ஸ்டெப் இதுதான்.

பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களப் பார்த்து மனசு பதறுது, கண்ணு கலங்குது.

இதுக்கு காரணம் போதைப் பொருள்தான். அதனை வேரோடு பிடுங்கி எறியணும்.

இந்த போதைப் பொருள் புதுசா வந்துடல. பலவருடப் பிரச்சினை. கண்டுக்கிடாம விட்டதால வேர் ஊன்றிப் போயிருகு.

யார் இத கண்டுக்கிடாம விட்டதுன்னு பேசி எந்தப் புரோஜனமும் இல்லை.

போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கணும்.

போதைப் பொருள், பெண்களுக்கு எதிரான கொடுமை, சட்டம் ஒழுங்கு எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

சட்டம் ஒழுங்கு மட்டுமில்ல, சமூக ஒழுங்கும், தனிமனித ஒழுங்கோட தொடர்புடையது

தனிமனிதன் ஒழுக்கமாக இருந்தால் பல பிரச்சினைகள கண்ட்ரோல் பண்ணலாம்.

தினசரி வாழ்வுல பெண்களை தொந்தரவு செய்றவங்கள சகிச்சிக்க முடியாது.

பெண்கள தொந்தரவு செய்றவங்க மீதான தண்டனைகள்,

நடவடிக்கைகள் கடுமையா இருக்கும். தப்பு செய்ய நினைக்கிறவங்களுக்கும் தப்பு செய்யக்கூடாதுனு பயம் வரணும்.

அதே நேரம் நிரபராதிகள் தண்டிக்கப்படாத வகையில், காவல் துறை அதிகாரிகள் கவனம் கொள்ள வேண்டும்.

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக,  ரூ. 354 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்குது. 2500 புதிய பணியிடங்கள்  உருவாக்கப்பட உள்ளது.  நவீன வாகனங்கள், தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்துவதோடு, குற்றங்களை தடுப்பதற்கு கவனம் செலுத்தப்படும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கு நடவடிக்கையா ட்ரோன் பேட்ரோல் அறிமுகப் படுத்தப்படும்.

மக்களின் கனவையும் எதிர்பார்ப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்துவோம்.

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை நடைமுறைக்கு கொண்டு வந்து கடுமையாக உழைத்த காவல்துறையினருக்குப் பாராட்டுகள்.

பெண்களின் கண்ணியத்தை பாதுகாப்பை உறுதி செய்வோம். நல்லதே நடக்கும்… கான்பிடண்டா இருங்க. வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திப்போம்!

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version