முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்தபடி சிங்கப் பெண் அதிரடிப்படையினை தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கதில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை, தமிழக காவல்துறை தலைவர சந்தீப் ராய் ரத்தோர்,  சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து முதலமைச்சரும், டிஜிபியும் திறந்த வாகனத்தில் சென்றனர். அப்போது சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அளித்த மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. ஆயுதப்படை பெண் போலீசார் நீராருங்கடலுடுத்த பாடலை பாடினர்.

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை லட்சணையை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட ஐ.ஜி. பவானீஸ்வரி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை குறித்த டீசர் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் வாகனத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அர்ப்பணித்து, அதனை இயக்கிப் பார்வையிட்டார். தொடர்ந்து  சிங்கப் பெண் அதிரடிப்படையினை தொடங்கி வைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version