Close Menu
    What's Hot

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»10 கோல்கள் மழை! பிரான்ஸை 6-4 என வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி: உலகக் கோப்பையில் 3-வது இடம் பிடித்து சாதனை!
    Featured

    10 கோல்கள் மழை! பிரான்ஸை 6-4 என வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி: உலகக் கோப்பையில் 3-வது இடம் பிடித்து சாதனை!

    Editor web1By Editor web1July 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரசிகர்களுக்கு உச்சக்கட்ட விருந்தாக அமைந்த நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 3வது இடத்திற்கான வெண்கலப் பதக்கப் போட்டியில், பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.

    அரைஇறுதியில் தோல்வி அடைந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்தும், பிரான்சும் மியாமியில் உள்ள மைதானத்தில் 3-வது இடத்திற்காக மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே இங்கிலாந்து வீரர்கள் விஸ்வரூபம் எடுத்தனர். குறிப்பாக நட்சத்திர வீரர் புகாயோ சாகா அபாரமாக விளையாடி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியிலேயே இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

    2வது பாதியில் விழித்துக்கொண்ட பிரான்ஸ் அணி பதில் தாக்குதலில் இறங்கியது. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே ஆக்ரோஷமாக விளையாடி 2 கோல்களை அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனது 22-வது கோலை பதிவு செய்த எம்பாப்பே, லியோனல் மெஸ்ஸியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டினார். பிரான்ஸ் அணி கடைசி வரை கடுமையாகப் போராடி மேலும் 2 கோல்களை அடித்த போதிலும், இங்கிலாந்தின் கோல் மழையை அவர்களால் தடுக்க முடியவில்லை.

    இறுதியில் 10 கோல்கள் அடிக்கப்பட்ட இந்த த்ரில்லிங் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 6-4 என்ற கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி 3-வது இடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் 3-வது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு சுமார் ரூ.279 கோடியும், 4-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட பிரான்ஸ் அணிக்கு ரூ.260 கோடியும் பரிசுத் தொகையாகக் கிடைத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒருநாள் தொடரை கைப்பற்றப்போவது யார்? லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து இன்று இறுதி மோதல்!
    Next Article 2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: சாம்பியன் பட்டத்திற்காக அர்ஜென்டினா – ஸ்பெயின் இன்று மோதல்!
    Editor web1
    • Website

    Related Posts

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    July 19, 2026

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    July 19, 2026

    நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரு நடிகராக 3வது, இயக்குநராக முதல் தேசிய விருது..!! மகிழ்ச்சியை பகிர்ந்த தனுஷ்..!!

    3 நாடுகளை நோக்கி.. தொடங்கியது ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்று பயணம்..!!

    நண்பரோ, உறவினரோ.. அமைச்சர் பெயரைச் சொல்லி வந்தால் அனுமதிக்காதீர்..! சம்பத்குமார் தடாலடி..!!

    மாறும் மாஞ்சோலை… எஸ்டேட் அடையாளங்கள் அழிப்பு; மீண்டும் காடாகும் மலைப்பகுதி!

    CM விஜய் அலுவலக டேபிளில் கிறிஸ்து சிலுவை.. இதுதான் உங்க மதசார்பின்மை அரசா..?? பரபரப்பு விவாதம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.