Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியது அதிமுக – இபிஎஸ்
    Featured

    திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியது அதிமுக – இபிஎஸ்

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2025Updated:June 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையால் மறைக்கப்பட்ட அந்த சார்? யார்? என்பதை அதிமுக ஆட்சி அமைந்ததும் வெளிக்கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு…

    அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.

    இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

    அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அஇஅதிமுக.

    பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.

    FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? #SIRஐ_காப்பாற்றியது_யார் ?

    இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!

    AIADMK AIADMK vs DMK DMK DMK News DMK Supporter Edappadi Palaniswami EPS EPS Speech EPS Statement Gnanasekaran MK Stalin Political Charges Political Controversy Tamil Nadu Tamil Nadu Politics அதிமுக அரசியல் சர்ச்சை இபிஎஸ் ஞானசேகரன் தமிழக அரசியல் திமுக
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப்…
    Next Article ராஜ்யசபா தேர்தல் – வேட்புமனு தாக்கல் தொடக்கம்
    Editor TN Talks

    Related Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.