Close Menu
    What's Hot

    மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    அமைச்சர் விலகல் அரசின் செயல்பாட்டை பாதிக்காது..!! பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்!

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி மனு… பிற்பகலில் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஃ பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் கண் துடைப்பா? – பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பர்த்வாஜ் கேள்வி!
    Featured

    ஃ பாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் கண் துடைப்பா? – பிரதமர் மோடிக்கு சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பர்த்வாஜ் கேள்வி!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 bhardwaj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்த நாட்டின் மக்கள் எப்படியெல்லாம் உயிரை இழக்கிறார்கள் என பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் தீபிகா நாராயண் பர்த்வாஜ் வலியுறுத்தியுள்ளார்.

    இந்திய பத்திரிகையாளரும் ஆவணப்பட இயக்குநருமான தீபிகா நாராயண் பர்த்வாஜ் பிரதமர் மோடியின் அறிவிப்பு தொடர்பாக தனது வினாவினை எழுப்பியுள்ளார்.

    டெல்லியில் மாணவர்களும், இளைஞர்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அவர்கள் மீது டெல்லி போலீசாரும் பாதுகாப்பு படையினரும் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கு பல்வேறு மட்டத்திலும் எதிப்புகள் நிலவியதைத் தொடர்ந்து இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் தான் எதையும்விட முக்கியம்! பேப்பர் லீக் விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை உறுதி செய்ய, ஃபாஸ்ட்-டிராக் நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    மேலும்,  இது தொடர்பாக அக்கறையுள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நமது தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் எனவும் தெர்வித்துள்ளார்.

    இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்த முயற்சிப்பவர்களை ஒருபோதும் விடமாட்டோம் எனவும் உறுதி அளித்துள்ளார்.

    ஆனால் பிரதமர் மோடியின் இந்தக் கருத்துகளுக்கும் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

    அந்த வகையில் பத்திரிகையாளரும், ஆவணப் பட இயக்குநருமான தீபிகா நாராயண் பர்த்வாஜ் தனது கருத்துகளை எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இளைஞர்களின் நலனைவிட வேறு எதுவும் முக்கியம் இல்லை என்றால், நீங்கள் இவ்வளவு தாமதமாகப் பேசியிருக்க மாட்டீர்கள் மோடி ஜி.அதுவும் நாடு இப்போது கொதிக்கத் தொடங்கியதால் தான் இது நடந்தபோதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    குழந்தைகள் உயிரிழந்தபோதே நீங்கள் விஷயத்தை நகர்த்தியிருக்க வேண்டும். நிர்பயா வழக்கின்போதும் ஃபாஸ்ட் டிராக் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும் நமது பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொல்லப்படுகிறார்கள். எங்கும் நீதி இல்லை.

    வெற்றி பெறும் மாநிலங்களை விட்டு சற்று விலகி, இந்த நாட்டின் மக்கள் எப்படி உயிரை இழக்கிறார்கள் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

    அமைச்சர் தர்மேந்திர பிரதான் உங்களுக்கும், நாட்டுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். அரசியலைத் தாண்டி, குறைந்தபட்சம் இப்போதாவது சரியான காரியத்தைச் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்.

     

     

    Deepika Narayan Bhardwaj fast-track courts India Justice System Judicial Reforms Prime Minister Narendra Modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோராடும் இளைஞர்களை கிண்டலடித்த விவகாரம்.. பெண் அதிரடிப்படை அதிகாரி மீது விமர்சன அலை..!!
    Next Article ஜனநாயகன் ரிலீஸ்..!! ஓபனிங் சீனில் தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஸ்! என்ன சீனா இருக்கும்..??
    Editor TN Talks

    Related Posts

    மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    July 23, 2026

    அமைச்சர் விலகல் அரசின் செயல்பாட்டை பாதிக்காது..!! பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்!

    July 23, 2026

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி மனு… பிற்பகலில் விசாரணை

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    அமைச்சர் விலகல் அரசின் செயல்பாட்டை பாதிக்காது..!! பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்!

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி மனு… பிற்பகலில் விசாரணை

    “இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்ததே நீங்கள்தான்”!. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

    நாடாளுமன்றத்தில் INDIA கூட்டணி போராட்டம்… எதிர்த்து NDA  கூட்டணியும் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.