Close Menu
    What's Hot

    நான் பேசுனாலே ப்ராப்ளம்தான் – நடிகர் ரஜினிகாந்த் எமோஷனல்!

    பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கர்ப்பிணி பெண்..!! சட்டென முதல்வர் விஜய் செய்த செயல்..!!

    மறைந்த கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் இன்று..!! தமிழக அரசு சார்பில் மரியாதை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பிஃபா உலகக்கோப்பை!. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!. காங்கோவை வீழ்த்தி த்ரில் வெற்றி!
    Featured

    பிஃபா உலகக்கோப்பை!. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!. காங்கோவை வீழ்த்தி த்ரில் வெற்றி!

    Editor web3By Editor web3June 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    colombia congo
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிஃபா உலகக்கோப்பை 2026-ன் குரூப் ‘K’ பிரிவில் இன்று நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் டிஆர் காங்கோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தத்த்ரில் வெற்றியின் மூலம் கொலம்பியா அணி உலகக்கோப்பையின் அடுத்த நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொலம்பியா ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், டிஆர் காங்கோவின் கோல்கீப்பர் லியோனல் எம்பாசி முதல் பாதியில் கொலம்பியாவின் நட்சத்திர வீரர் லூயிஸ் டயஸ் மற்றும் ஜான் ஆரியாஸ் ஆகியோரின் சிறப்பான கோல் முயற்சிகளை அபாரமாகத் தடுத்து நிறுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் எதுவுமின்றி 0-0 என சமநிலையில் முடிந்தது.

    இரண்டாம் பாதியில் கொலம்பிய பயிற்சியாளர் நெஸ்டர் லோரென்சோ அதிரடி மாற்றங்களைச் செய்தார். 57-வது நிமிடத்தில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸிற்குப் பதிலாக ஜான் கோர்டோபாவும், யுவான் குவாட்ரடோவும் களமிறக்கப்பட்டனர்.

    பின்பு 76வது நிமிடத்தில் மைதானமே அதிரும் வகையில் கொலம்பியா தனது முதல் கோலை அடித்தது. மாற்று வீரர் ஜான் கோர்டோபா கொடுத்த துல்லியமான த்ரூ-பாஸை நோக்கி ஓடிவந்த டிஃபென்டர் டேனியல் முனோஸ், பந்தை மிக நேர்த்தியாக கோல் போஸ்ட்டின் இடது மூலைக்கு தள்ளி கோலாக மாற்றினார்.

    கோல் வாங்கிய பிறகு டிஆர் காங்கோ அணி ஆட்டத்தை சமன் செய்ய ஆக்ரோஷமாகப் போராடியது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+1′) காங்கோவின் மாற்று வீரர் நாத்தனேல் மபுகு பாக்ஸிற்கு வெளியிலிருந்து ஒரு அபாயகரமான ஷாட் அடித்தார். அது நேராக டாப் கார்னரை நோக்கிச் சென்றது. ஆனால், கொலம்பிய கோல்கீப்பர் கமில்லோ வர்காஸ் காற்றில் பறந்து அதை தடுத்து அசாத்தியமான ‘சேவ்’ ஒன்றைச் செய்தார்.

    இறுதிவரை காங்கோவால் கொலம்பியாவின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. நடுவரின் இறுதி விசிலுக்குப் பின் கொலம்பியா 1-0 என்ற கணக்கில் வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கியது.

    ஏற்கனவே முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 3-1 என வீழ்த்தியிருந்த கொலம்பியா அணி, தற்போது 6 புள்ளிகளுடன் குரூப் K பிரிவில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. போர்ச்சுகல் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்ததாக நடைபெறவிருக்கும் குரூப் பிரிவின் கடைசிப் போட்டியில் கொலம்பியா, பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அந்தப் போட்டியில் ‘டிரா’ செய்தாலே கொலம்பியா குரூப் சாம்பியனாக அடுத்த சுற்றுக்குச் செல்லும்.

    Colombia colombia victory Congo FIFA World Cup
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!
    Next Article திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!
    Editor web3
    • Website

    Related Posts

    நான் பேசுனாலே ப்ராப்ளம்தான் – நடிகர் ரஜினிகாந்த் எமோஷனல்!

    June 24, 2026

    பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கர்ப்பிணி பெண்..!! சட்டென முதல்வர் விஜய் செய்த செயல்..!!

    June 24, 2026

    மறைந்த கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் இன்று..!! தமிழக அரசு சார்பில் மரியாதை..!!

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நான் பேசுனாலே ப்ராப்ளம்தான் – நடிகர் ரஜினிகாந்த் எமோஷனல்!

    பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கர்ப்பிணி பெண்..!! சட்டென முதல்வர் விஜய் செய்த செயல்..!!

    மறைந்த கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் இன்று..!! தமிழக அரசு சார்பில் மரியாதை..!!

    ரூ.10 லட்சம் மதிப்பு.. வைர நெக்லஸ் காணோம்..!! போலீசில் நடிகர் ரவி மோகன் பரபரப்பு புகார்..!!

    திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.