தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவாக வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் கடந்த தேர்தல்களில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து மக்கள் சேவை செய்ய தேர்ந்தெடுத்த மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தமிழக முழுவதும் NDA கூட்டணி வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை அளித்து உறுதுணையாக இருந்த அனைத்து பொதுமக்களுக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.

மேலும்,  பாஜக சார்பில் தகுதியும் திறமையும் கொண்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து போட்டியிடச் செய்த தேசிய பாஜக தலைமைக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புஎன்ற உயர்ந்த நம்பிக்கைக்கு ஏற்ப, தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்கும் புதிய அரசாங்கத்திற்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வரும் ஆட்சிக்காலத்தில் மக்கள் நலனையே முன்னிலையாகக் கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version