முன்னாள் அதிமுக எம்.பி, கே.சி.பழனிசாமி தனது எக்ஸ்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; –

தவெக அரசு அமைந்ததும் சட்டமன்றத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் முதலில் பாடப்பட்டு, இறுதியில் மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது, விமர்சனங்களைத் தவிர்ப்பதோடு மத்திய அரசையும் அனுசரிக்கும் வகையில் ஒரு முடிவை தவெக எடுத்தது.

அதேபோல், அன்புமணி ராமதாஸ் கூறிய நவம்பர் 1 மற்றும் திமுக கூறிய ஜூலை 18 ஆகிய இரண்டு தினங்களிலும் தமிழ்நாடு நாளைக் கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறீர்கள்.

மேகதாது அணை விவகாரத்திலும், “தீர்ப்பாயம் வேண்டும்என்று திமுக கூறிய நிலையில், அதற்கும் தேவையான திருத்தங்களைச் செய்கிறோம் என்று கூறுகிறீர்கள்.

எதிலும் நீங்கள் பின் விளைவுகளைப் பார்ப்பதில்லை. உங்களுக்கென்று ஒரு கொள்கையோ, தெளிவான பார்வையோ இருப்பதாகத் தெரியவில்லை. யார் என்ன சொன்னாலும் அதற்கேற்ப தலையாட்டாமல், உங்களுக்கென ஒரு சித்தாந்தமும் தெளிவான அரசியல் பார்வையும் இருக்க வேண்டும்.

இவ்வாறு கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version