பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தின் கோஹ் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது பாரதி என்ற பெண் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர் அவரது உடலை அறுவை சிகிச்சை அறையிலேயே விட்டுவிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் வெளியேறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியமே மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறுவை சிகிச்சை அரங்கிலேயே இறந்த பெண்ணின் உடலைப் போட்டுவிட்டு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version