Close Menu
    What's Hot

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை
    Featured

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 bjp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை கோபாலபுரத்தில் கண்காட்சியில் பங்கேற்ற பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது; –

    தற்போது பள்ளி வாகனங்கள் நிறைய விபத்துகளில் சிக்குகின்றன. எனவே பள்ளி வாகனங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும். அதேபோல் பள்ளி நேரத்தையும் மாற்றி அமைக்க வேண்டும்.

    திருப்பூரில் 56 வயது தலைமை ஆசிரியர் மாணவிகள் பலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருப்பது பொறுக்கமுடியவில்லை. பள்ளிகளில் பாலியல் தொந்தரவுகளைத் தடுக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிங்கப் பெண் படை வந்தபிறகும் பெண்கள் அசிங்கப்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இது எல்லாவகையிலும் தடுக்கப்படவேண்டும்.

    சிங்கப்பெண் படைக்கு என்ன தனி அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது. ஆளுநர் கூப்பிட்டு அதிகாரிகள் சென்றால் தண்டிக்கப்படுவீர்கள் என தமிழக அமைச்சர் கூறியிருப்பது எந்த விதத்திலும் அரசியல் அமைப்பில் ஏற்றுக் கொள்ள முடியாது.

    அரசியல் அனுபவே இல்லாத இளைய அமைச்சர் ஒருவர், ஆளுநரை மரியாதை இல்லாமல் பேசுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

    வைகை ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்று ஆளுநர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

    தமிழ்நாட்டில் ஒரே கட்சியில் இருப்பதே இன்று அதிசயமாகி விட்டது.  ஆட்சி மாறியதும் எம்.எல்.ஏ பதவியைக் கூட ராஜினாமா செய்துவிட்டு மக்கள் அளித்த தீர்ப்பையும் மதிக்காமல் வந்து விடுகிறார்கள் .

    41 நகராட்சி அலுவலகங்களில் லஞ்சப்பணம் பிடிபட்டிருக்கிறது. இதற்கு முந்தைய அரசும், தவெக அரசும் தலைகுனிய வேண்டும்.  லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை தொடர வேண்டும்.

    அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதை நீதிமன்றமே கண்டித்துள்ளது. 6 மாதத்தில் ஆட்சி மாறும் என அனிதா ராதாகிருஷ்ணன் மிரட்டுவது சரியானதல்ல.

    தவெக அமைச்சர்கள் அநாகரிகமாகப் பேசுவது தவிர்க்கப்படவேண்டும்.

    பெண்கள் பாதுகாப்பிலும், அரசுப் பணி வழங்கப்படுவதிலும் முதலமைச்சர் கவனம் செலுத்தவேண்டும்.

    ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்களை தேர்வு செய்ததில் பணநடமாட்டம் இருப்பதாகக் குற்றச்சாட்டு வந்துள்ளது. தங்கள் மீது குற்றச்சாட்டு வராத வகையில் இந்த ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மேகதாது அணையைத் தடுக்க அங்குள்ள காங்கிரஸ் அரசும், இங்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸும் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    BJP Former Governor Governor tamilisai soundararajan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026 புதிய ரேஷன் கார்டு: 6 லட்சம் விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்புக்கு அரசு விளக்கம்..!!
    Next Article நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??
    Editor TN Talks

    Related Posts

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    July 4, 2026

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??

    July 4, 2026

    2026 புதிய ரேஷன் கார்டு: 6 லட்சம் விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்புக்கு அரசு விளக்கம்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அவதூறு வழக்குகளுக்கெல்லாம் கைதா..?? திமுக ஆட்சியில் அப்படி நடந்ததே இல்ல.!! ஆர்.எஸ்.பாரதி காட்டம்..!!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: பரபரப்பான அரசியல் சூழலில் தொடக்கம்..!! எப்போ தெரியுமா..??

    ஆளுநரைப் பற்றி அரசியல்வாதிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது; முன்னாள் ஆளுநர் தமிழிசை

    2026 புதிய ரேஷன் கார்டு: 6 லட்சம் விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்புக்கு அரசு விளக்கம்..!!

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.