ரயில் ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால், 3 சதவீதம் கட்டணம் தள்ளுபடி என ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டிஜிட்டல் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் ரயில்ஒன் செயலியில் அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகள் மூலமாகவும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுக்கும்போது 3 சதவீதம் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
