Close Menu
    What's Hot

    ஜூலை 19-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடக்கிறது!

    வியட்நாம் படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த மூவர் பலி – உடல்களை மீட்டுக் கொண்டுவர அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

    ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவுக்கு கிடையாது – எ.வ.வேலு ஆவேசம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோபி; பழுதான லிப்டில் சிக்கிய 12 பேர் –  பத்திரமாக மீட்ட தீயணைத்துறையினர்
    Featured

    கோபி; பழுதான லிப்டில் சிக்கிய 12 பேர் –  பத்திரமாக மீட்ட தீயணைத்துறையினர்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 lift
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோபிசெட்டிபாளையம் அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே உடற்பயிற்சி நிலைய திறப்பு விழாவில் லிப்ட் பழுதாகியதால் சிக்கிய 12 பேரை  தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

     கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனை அருகே   புதிய உடற்பயிற்சி நிலையம்  அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த உடற்பயிற்சி மையத்தினை வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து சென்றார்.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்

    நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தரைத்தளத்தில் இருந்து மேல் தளத்திற்குச் செல்வதற்காக  12 பேர் அங்குள்ள லிப்டில் ஏறியுள்ளனர்.

    ஆனால், லிப்ட் இயங்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென நடுவழியில் நின்றுவிட்டது.

    லிப்ட் திடீரென நின்றதோடு, அதன் கதவுகளும் திறக்காததால் உள்ளே இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே போதிய காற்றோட்டம் இல்லாததால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயமும் உருவானது.

    உடனடியாக வெளியில் இருந்த ஊழியர்கள் லிப்டை இயக்க முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.

    இது குறித்து உடனடியாக கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் இறங்கினர். முதற்கட்டமாக, லிப்டின் கதவுகளைச் சற்றே விலக்கியும், கதவுகளை உடைத்தும் உள்ளே இருந்தவர்களில் 12 பேரைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

    தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு உடனடியாக லிப்டில் இருந்தவர்களை வெளியேற்றியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    Fire and Rescue Services Fire Department Gobi News Lift Malfunction Lift Rescue
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிறந்த நாளில் ஞானபீடம் விருது – நாளை டெல்லி செல்வதாக வைரமுத்து ட்வீட்!
    Next Article முதலமைச்சரான பிறகு நாளை பெரம்பூருக்கு ஜோசப் விஜய் வருகை;  எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் புதிய செயலி தொடக்கம்!
    Editor TN Talks

    Related Posts

    ஜூலை 19-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடக்கிறது!

    July 12, 2026

    வியட்நாம் படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த மூவர் பலி – உடல்களை மீட்டுக் கொண்டுவர அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

    July 12, 2026

    ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவுக்கு கிடையாது – எ.வ.வேலு ஆவேசம்

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூலை 19-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்; நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடக்கிறது!

    வியட்நாம் படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த மூவர் பலி – உடல்களை மீட்டுக் கொண்டுவர அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை

    ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவுக்கு கிடையாது – எ.வ.வேலு ஆவேசம்

    கடப்பாவில் இருவர் பலி; ஆந்திராவில் மீண்டும் கொரோனா பீதி – தற்காப்புக்கு தமிழகம் தயாரா?  

    முதலமைச்சரான பிறகு நாளை பெரம்பூருக்கு ஜோசப் விஜய் வருகை;  எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் புதிய செயலி தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.