மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை 12-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டாக கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரியான சம்மேளனங்கள், ஐக்கிய விவசாய முன்னணி அமைப்புகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version