கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற குரல் பல்வேறு தரப்புகளிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி இந்தக் கருத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறது.

அதிலும் தமிழக தலைமையும் டெல்லி தலைமையும் அமைதியாக இருக்கும் நிலையில், கூட்டணி ஆட்சி வேண்டும் என்ற பிடிவாதத்துடன் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்து வருகிறார். ஆனாலும் திமுக பின்வாங்கப்போவதில்லை என்பதை மு.க,ஸ்டாலின் இன்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அதாவது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று வெளிப்படையாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துவிட்டார். இதனால் காங்கிரஸிடையே அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், முதல்வரின் முடிவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, இதுபற்றி மக்கள் முடிவெடுப்பார்கள், கூட்டணி ஆட்சியா, ஒரு கட்சி ஆட்சியா என்ப்தை 2006- லேயே முடிவெடுக்காதது காங்கிரஸின் தவறு என்று பதிவிட்டுள்ளார். 2006ல் பெரும்பான்மை பெறாமல் கூட்டணி உதவியால் திமுக ஆட்சி அமைத்தப்போதே “கூட்டணி ஆட்சி” பற்றி பேசியிருக்கவேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கூறுகிறார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version