Close Menu
    What's Hot

    அதிமுக தொடர்பாக இபிஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்!

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் தம்பிக்கு அரசு வேலை!. திருமாவளவன் நெகிழ்ச்சி!
    Featured

    ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் தம்பிக்கு அரசு வேலை!. திருமாவளவன் நெகிழ்ச்சி!

    Editor web3By Editor web3May 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kavin brother thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்துள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கவின், சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது பள்ளிக் கால தோழி சுபாஷினியை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே விடுமுறையில் ஊருக்கு வந்த கவின் தனது தாத்தாவை சிகிச்சைக்காக கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி பாளையங்கோட்டைக்கு அழைத்துச் சென்றார். கவின் அங்கு வந்திருப்பதை அறிந்த காதலி சுபாஷினியின் தம்பி சுர்ஜித், அவரிடம் பேசுவது போல அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

    கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதுதொடர்பாக உடனடியாக சுர்ஜித்தை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது கொலை, வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. சுர்ஜித்தின் தந்தை, தாய் இருவரும் சப் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் நிலையில், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தந்தை சரவணன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

    இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதேசமயம் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலை மற்றும் நிலம் வழங்க வேண்டும். புதிய வீடும் கட்டித் தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை திருமாவள்வன் வலியுறுத்தி வந்தார்.

    இந்தநிலையில், கவினின் தம்பி பிரவீனுக்கு, அரசுத் துறையான சிப்காட்டில் (SIPCOT) உதவி மேலாளர் பணியிடத்திற்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குப் பதிவின் அடிப்படையில், தமிழக வரலாற்றிலேயே தகுதிக்கேற்ப ‘உதவி மேலாளர்’ போன்ற உயர் பதவி வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    https://x.com/thirumaofficial/status/2058696399680909771

    இவ்விவகாரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தகவல் பகிர்ந்துள்ளார். “நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவினின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. அவரது தம்பி பிரவீன், சிப்காட் நிறுவனத்தில் உதவி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசு பணி நியமன ஆணையை என்னிடம் காண்பித்து, கவினின் குடும்பத்தினர் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர் என்று பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleIPL பிளே ஆஃப்-ல் மோதும் அணிகள்!. பைனலுக்குள் நுழைவது யார்?
    Next Article பெண்கள் பாதுகாப்பில் மற்றொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறது!. இபிஎஸ்!
    Editor web3
    • Website

    Related Posts

    அதிமுக தொடர்பாக இபிஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்!

    June 4, 2026

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    June 4, 2026

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுக தொடர்பாக இபிஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்!

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    ’கருப்பு’ படத்தில் ஆர்யா நடித்திருந்தாரா? கேமியோ பகுதி நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

    மேட்டூர் அணை திறப்பு எப்போது?. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.