Close Menu
    What's Hot

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ரசிகர்கள் நெஞ்சங்களில் என்றும் நிறைந்திருப்பார் கே.பாக்யராஜ்; ஆளுநர், மக்கள் பிரதிநிதிகள் இரங்கல்
    Featured

    ரசிகர்கள் நெஞ்சங்களில் என்றும் நிறைந்திருப்பார் கே.பாக்யராஜ்; ஆளுநர், மக்கள் பிரதிநிதிகள் இரங்கல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 bak
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி;-

    மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

    தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது. அவரது திரைப்பயணம் மற்றும் மரபு, பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

    அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”  –

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

    தமிழ்த் திரைப்பட உலகின் முன்னோடி இயக்குநரும், சிறந்த நடிகரும், தனித்துவமான திரைக்கதை ஆசிரியரும், எழுத்தாளருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

    அண்மையில் திரையுலகில் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் சிறப்பாகப் பாராட்டப்பட்ட நிலையில், அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

    நகைச்சுவை, குடும்பப் பாசம் மற்றும் சமூக மதிப்புகளை மையமாகக் கொண்டு பல காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    எஸ்.ஆர்.எம்  பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பாரிவேந்தர்

    நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என தமிழ் திரையுலகில் தனித்துவமான முத்திரையைப் பதித்த பாக்யராஜ்  அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.

    தனது எளிய கதையாடல், நகைச்சுவை கலந்த சமூகப் பார்வை மற்றும் குடும்ப மதிப்புகளை பிரதிபலிக்கும் படைப்புகள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம்பிடித்தவர். அவரது கலைப் பயணமும், தமிழ் சினிமாவிற்கான பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    “கலைஞர்கள் மறைந்தாலும், அவர்கள் படைத்த கலை என்றும் அழியாது. பாக்கியராஜ் அவர்களின் புகழும் படைப்புகளும் தலைமுறைகளைத் தாண்டி நிலைத்திருக்கும்.”

    அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்;

    தமிழ்த் திரையுலகின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், எழுத்தாளர், நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கின்றது.

    பாக்யராஜ், முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு, தாவணிக் கனவுகள், தூறல் நின்னு போச்சு உள்ளிட்ட, தனது பல்வேறு படைப்புகள் வழியாகத் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைத் தமிழ்த் திரையுலகில் பெற்றவர்.

    அன்னாரின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    அன்புத் தோழி பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ், குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர், மற்றும் அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    விசிக எம்.பி முனைவர் ரவிக்குமார்

    திரைப்பட நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கமர்ஷியல் நோக்கத்துக்கென எடுக்கப்பட்ட தனது திரைப்படங்களின் மூலமும்கூட சில சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர். மரணம் திடுமென அவரைப் பறித்துக்கொண்டுவிட்டது. தமிழ்த் திரையுலகில் அவரது மறைவு ஏற்படுத்தும் வெற்றிடத்தை இட்டு நிரப்ப எவருமில்லை.  அவருக்கு என் அஞ்சலி!

    காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்

    தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா என பன்முகத் திறமையால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த திரு. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Bhagyaraj Condolences K Bhagyaraj Tribute to Bhagyaraj
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇயக்குனர் கே.பாக்யராஜின் திரைப்பயணம்
    Next Article ‘திரைக்கதை அரசர்’ பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை..!! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!
    Editor TN Talks

    Related Posts

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    July 19, 2026

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    July 19, 2026

    திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு நன்மையே – வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கணிப்பு

    58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.