Close Menu
    What's Hot

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மதுரை அருகே கோர விபத்து: 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! பெண்கள் உட்பட 6 பேர் பலி!
    Featured

    மதுரை அருகே கோர விபத்து: 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! பெண்கள் உட்பட 6 பேர் பலி!

    Editor web1By Editor web1July 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 13 10h35m26s922
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே இன்று அதிகாலை நடந்த பயங்கர சாலை விபத்தில், இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி வஞ்சி நகர் நான்கு வழிச்சாலையில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்புறம் உள்ள சாலைக்குள் புகுந்தது.

    vlcsnap 2026 07 13 10h35m40s252

    அப்போது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்து கட்டுப்பாடின்றி சாலையோரத்தில் இருந்த பேருந்து பயணிகள் நிழற்குடையின் மீது மோதி நின்றது. இதில் நிழற்குடை முற்றிலும் நொறுங்கிச் சேதமடைந்தது.

    இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது.

    vlcsnap 2026 07 13 10h36m05s419

    விபத்து குறித்து தகவலறிந்த மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

    விபத்தினால் நான்கு வழிச்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான பேருந்துகள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

    மதுரை சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇயக்குநர் பாக்யராஜ் மறைவு..! வார்த்தைகளால் விளையாடும் பார்த்திபன்..! பட்டுக்கோட்டை பிரபாகர் வருத்தம்..!
    Next Article மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வந்தால்..! தவெக ஆட்சி முடிந்துவிடும்..! ராஜேந்திர பாலாஜியின் பேச்சால் சர்ச்சை..!
    Editor web1
    • Website

    Related Posts

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 13, 2026

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    July 13, 2026

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடக்கம்!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது: சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீடு தொடக்கம்!

    லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீராங்கனையின் சாதனை..! வரலாற்றில் இடம் பிடித்து அசத்தல்..!

    ‘அன்பே டயானா’டிரெய்லர் வெளியீடு –  நாயகன், நாயகி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்கள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.