Close Menu
    What's Hot

    திமுக 40 எம்.பி தொகுதிகளிலும் ராஜினாமா செய்யத் தயாரா? – துரை வைகோ சவால்!

    கன்னியாகுமரி : குட்கா வழக்கில் கைதான கைதி..! திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு..!

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
    Featured

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 mrk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2006- 2011 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக, 3 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

    எம் ஆர் கே பன்னீர்செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர்  மீதான இந்த வழக்கை விசாரித்த  கடலூர் நீதிமன்றம், மூன்று பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், கடலூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஜூலை 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், வழக்கு விசாரணைக்கு கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    Disproportionate Assets Case M R K Panneerselvam Madras High Court MRK Panneerselvam
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்
    Next Article சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!
    Editor TN Talks

    Related Posts

    திமுக 40 எம்.பி தொகுதிகளிலும் ராஜினாமா செய்யத் தயாரா? – துரை வைகோ சவால்!

    July 13, 2026

    கன்னியாகுமரி : குட்கா வழக்கில் கைதான கைதி..! திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு..!

    July 13, 2026

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக 40 எம்.பி தொகுதிகளிலும் ராஜினாமா செய்யத் தயாரா? – துரை வைகோ சவால்!

    கன்னியாகுமரி : குட்கா வழக்கில் கைதான கைதி..! திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு..!

    சென்னை : லண்டன் விமானத்தில் மோதிய பறவை..! விமானியின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய பயணிகள்..!

    சொத்துக்குவிப்பு வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    மோடி முன்பு சாந்தூர் வாசித்த ஜப்பான் பிரதமர்; இசைக்கருவியின் பாரம்பரியத்தை விளக்கிய இந்திய தூதரகம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.