கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளியில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓசூர் மாநகராட்சி, தர்கா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
உடற்கல்வி வகுப்பின் போது விளையாட வந்த 5ம் வகுப்பு சிறுமியிடம் வெங்கடேஷ் தவறான தொடுதலில் ஈடுபட்டு பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி, அவரது தாயாரிடம் தெரிவிக்க பின்னர் பள்ளி நிர்வாகமும், சிறுமியின் தாயாரும் ஓசூர் அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷிடம் விசாரணை நடத்தியதில் புகார் உண்மை எனத் தெரியவரவே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
