2026-ஆம் ஆண்டுக்கான பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் காலிறுதி ஆட்டங்கள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இந்தச் சுற்றில் பிரான்ஸ் – மொராக்கோ, ஸ்பெயின் – பெல்ஜியம், இங்கிலாந்து – நார்வே மற்றும் அர்ஜென்டினா – சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான முக்கிய ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
ரசிகர்கள் இந்தப் போட்டிகளைத் தொலைக்காட்சியில் இலவசமாகக் காண தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் சேனலைப் பயன்படுத்தலாம். டிஜிட்டல் தளத்தைப் பொறுத்தவரை, ஜியோ ஃபைபர் (JioFiber) பயனர்கள் ‘Unite8’ சேனல்களை இலவசமாகப் பார்க்கலாம். டாடா பிளே-வில் உள்ள Unite8 சேனல்கள் மற்றும் ஜீ5 (Zee5) செயலியின் நேரலை ஒளிபரப்பிற்குத் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
https://x.com/ddsportschannel/status/2074745832004632623?
போட்டிகளின் கால அட்டவணை: பிரான்ஸ் மற்றும் மொராக்கோ இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை அதிகாலை 1:30 மணிக்குத் தொடங்குகிறது.
ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் சனிக்கிழமை அதிகாலை 12:30 மணியிலிருந்து மோதுகின்றன.
இங்கிலாந்து மற்றும் நார்வே (ஹாலண்ட்) இடையிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு நடைபெறுகிறது.
இறுதியாக, அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6:30 மணிக்குக் காலிறுதி ஆட்டத்தில் பங்கேற்கின்றன.
முந்தைய சுற்றுகளில் ஜெர்மனியின் எதிர்பாராத தோல்வி, அர்ஜென்டினா மற்றும் பெல்ஜியம் அணிகளின் கடைசி நேரப் போராட்ட வெற்றிகள் எனப் பல சுவாரசியமான நிகழ்வுகள் இந்த உலகக்கோப்பையில் அரங்கேறியுள்ளன.

