Close Menu
    What's Hot

    நீட் வேண்டாம் என்பதே முதல்வரின் தெளிவான நிலைப்பாடு..!! அமைச்சர் நிர்மல்குமார் உறுதி..!!

    தர்மேந்திர பிரதானை முழுமையாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்..!! ராகுல் வலியுறுத்தல்..!!

    மறைந்த நெல் ஜெயராமன் நினைவாக தேசிய நெல் திருவிழா!. 174 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்
    Featured

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 popstar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியத் தொலைக்காட்சிகளில் இல்லாத வகையில் முதன்முறையாக தனியார் நடத்தியிருக்கும் தமிழ் தனி இசைக்குரல் தேர்வு நிகழ்ச்சி இணைய வாசிகளை  மட்டுமின்றி இசையை ரசிக்கும் தமிழ் நெஞ்சங்களையும் உற்சாகத் துள்ளலிட வைத்திருக்கிறது.

    விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், ஜீ தமிழின், சரிகமபதநி, சன் தொலைக்காட்சியின் சன் சிங்கர், கலைஞர் தொலைக்காட்சியின குரல் அரசன் என பல்வேறு தொலைக்காட்சிகளும் இதுபோன்ற குரல் தேர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அதனை ஒளிபரப்பு செய்து தங்கள் பார்வையாளர்களை பெருக்கி வருகின்றன.

    அதிலும் சீசனுக்கேற்ப பக்திபாடல்கள், காதல் பாடல்கள், பழைய பாடல்கள் என நடத்தி மக்களின் வைபை அதிகரித்து வருகிறார்கள்.

    009 popstar a

    ஆனாலும் இத்தகைய பாடகர்கள் தேர்வு நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சினிமா பாடல்கள் மட்டுமே பிரதானமாகப் பாடப்படுகின்றன. ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமானப் பாடல்களை மீண்டும் பாடச் செய்யப்பட்டு அதனைப் பாடுபவரை சிறந்த குரல்தேர்வாகத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வதோடு, அவர்களின் வறுமையான பின்புலம், மனதைப் பாதிக்கச் செய்த நிகழ்வுகள் என பலவற்றையும் படம்பிடித்துக் காட்டி தங்கள் நிகழ்ச்சிக்கான ஆதரவைப் பெருக்கிக் கொள்வதும் உண்டு.

    இப்படி வெவ்வேறு தொலைக்காட்சிகளில் போட்டிகள் நடத்தப்பட்டாலும் அது சினிமாப் பாடல்கள் என்னும் வட்டத்துக்குள் மட்டுமே அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்முறையாக இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்து புதிய சூழலாக தமிழ் தனி இசைக் கலைஞர்களின் திறமைகளை அங்கீரித்துள்ளது ஐ-பாப்ஸ்டார் தமிழ் என்னும் நிகழ்ச்சி.

    திறமையுள்ள சுயாதீன தமிழ் தனி இசைக் கலைஞர்களுக்கான வாய்ப்பு வழங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் சினிமா பாடல் வட்டத்துக்குள் இல்லாமல் நமக்குத் தோன்றியதை செய்திருக்கிறார்கள் தமிழ் தனி இசைப் பாடகர்கள்.

    சென்னையில் நடந்தேறியுள்ள ஐ-பாப்ஸ்டார் தமிழ் (I-POPSTAR Tamil) நிகழ்ச்சியின் முதல் எபிசோடு ஜூலை 23, 2026 அன்று வெளியாகியிருக்கிறது.

    முழுக்க முழுக்க சுயாதீனமான மற்றும் சொந்த இசையை (Indie Music & Original Voices) ஊக்குவிக்கும் ஒரு மேடைப் போட்டியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் சூப்பர் மெண்டராக யுவன் சங்கர் ராஜாவும், மெண்டராக  அசல் கோலார், அந்தோனி தாசன், சக்திஸ்ரீ கோபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.

    முதல் எபிசோடு நிகழ்ச்சியில் நடைபெற்ற குரல் தேர்வில் பங்கேற்றவர்கள் தாங்களே எழுதி இசையமைத்தப் பாடல்களைப் பாடியிருப்பது பார்ப்போரையும், கேட்போரையும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

    தங்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைக்காதா ஏன் எங்கிக் கொண்டிருப்போருக்கு ஒரு மேடை போட்டு கொடுத்துள்ளது  ஐ-பாப்ஸ்டார் தமிழ்!

    Digital Music Platform I-Popstar Tamil Independent Tamil Music Tamil Musicians Viral Entertainment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅன்று தர்மேந்திர பிரதானை ஹீரோவாக்கிய அதே மாணவர் போராட்டம், இன்று அவரை வில்லனாக்கிவிட்டது!
    Next Article பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!
    Editor TN Talks

    Related Posts

    நீட் வேண்டாம் என்பதே முதல்வரின் தெளிவான நிலைப்பாடு..!! அமைச்சர் நிர்மல்குமார் உறுதி..!!

    July 25, 2026

    தர்மேந்திர பிரதானை முழுமையாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்..!! ராகுல் வலியுறுத்தல்..!!

    July 25, 2026

    மறைந்த நெல் ஜெயராமன் நினைவாக தேசிய நெல் திருவிழா!. 174 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் வேண்டாம் என்பதே முதல்வரின் தெளிவான நிலைப்பாடு..!! அமைச்சர் நிர்மல்குமார் உறுதி..!!

    தர்மேந்திர பிரதானை முழுமையாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்..!! ராகுல் வலியுறுத்தல்..!!

    மறைந்த நெல் ஜெயராமன் நினைவாக தேசிய நெல் திருவிழா!. 174 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி!

    தூத்துக்குடி இளைஞர் மரணம் குறித்து வெள்ளை அறிக்கை… நடிகர் சரத்குமார் வலியுறுத்தல்

    வெண்கலப் பதக்கத்தால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜண்டுகுமார்.. பிரதமர் மோடி வாழ்த்து..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.