Close Menu
    What's Hot

    ஒரு கையுடன் சைக்கிள் பயணம்…  67 ஆயிரம் கி.மீ. சாதனை படைத்த மாற்றுத்திறனாளி தமீம் அன்சாரி!

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்தியப் பெருங்கடலை பாதுகாப்பதில் இந்தியா- செஷல்ஸ் ஒரே புள்ளியில் இணைகிறது! பிரதமர் மோடி
    Featured

    இந்தியப் பெருங்கடலை பாதுகாப்பதில் இந்தியா- செஷல்ஸ் ஒரே புள்ளியில் இணைகிறது! பிரதமர் மோடி

    Editor web1By Editor web1June 28, 2026Updated:June 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 06 28 200603
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவையும் செஷல்ஸையும் பெருங்கடல் இணைப்பதாகவும், அதனை பாதுகாப்பதில் இருநாடுகளும் ஒரே புள்ளியில் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான செஷல்ஸுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 28ம் தேதி மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது, செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.

    இந்தியாவையும் செஷல்ஸ் தீவையும் இந்தியப் பெருங்கடல் பிரிக்கவில்லை, மாறாக அது இரு நாடுகளையும் இணைக்கிறது என்றார். நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இரு நாடுகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாக இப்பெருங்கடல் செயல்படுவதா அவர் தெரிவித்தார். செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவின் 140 கோடி மக்களின் வாழ்த்துகளை அங்கு கொண்டு சேர்த்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியப் பெருங்கடலை பாதுகாப்பதில் இருநாடுகளின் கூட்டு ஒத்துழைப்பு மற்றும்  அர்ப்பணிப்பு ஒரே புள்ளியில் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2015-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் பகுதியில் முதன்முதலாகச் சந்தித்த நாடு செஷல்ஸ்தான் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

    செஷல்ஸ் நாட்டின் 50-வது தேசிய தின விழா ஜூன் 29 (திங்கள்கிழமை) அன்று நடைபெற உள்ளது. அந்நாட்டு அதிபர் பேட்ரிக் விடுத்த அழைப்பின் பேரில், விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். விக்டோரியா விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு அரசு முறைப்படி சிறப்பான வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

    #PMModi #India #Seychelles #Parliment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தலுக்கு தயாராக இருங்க! – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
    Next Article தங்கம் வாங்குவதை தவிர்த்த மக்களுக்கு நன்றி! – பிரதமர் மோடி
    Editor web1
    • Website

    Related Posts

    ஒரு கையுடன் சைக்கிள் பயணம்…  67 ஆயிரம் கி.மீ. சாதனை படைத்த மாற்றுத்திறனாளி தமீம் அன்சாரி!

    July 19, 2026

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    July 19, 2026

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரு கையுடன் சைக்கிள் பயணம்…  67 ஆயிரம் கி.மீ. சாதனை படைத்த மாற்றுத்திறனாளி தமீம் அன்சாரி!

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    போலீஸை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு… நாட்டு வெடிகுண்டு தயாரித்த சதி அம்பலம்!

    FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.