இந்தியாஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இந்திய தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) மற்றும் பொதுமக்களுக்கு கணிசமான பலன்களை வழங்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் இந்திய தொழில்துறை பிரதிநிதிகளுடன் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இந்தியாஐரோப்பிய ஒன்றிய FTA-வின் சாத்தியமான பலன்கள் குறித்து விரிவாக விவாதித்தார்.

 இந்தக் கூட்டத்தில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு (FICCI), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (ASSOCHAM) உள்ளிட்ட முன்னணி தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 இதுகுறித்து சமூக வலைதளமான X-இல், “இந்தியாEU சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இந்திய தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறப்பதோடு, தொழில் நிறுவனங்கள், MSME-கள் மற்றும் மக்களுக்கு நேரடி பலன்களை அளிக்கும் வகையில் இருக்கும்” என்று பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு, புதன்கிழமை நடைபெற்ற 3-வது இந்தியாஐரோப்பிய ஒன்றிய தொழில்துறை வட்டமேசை மாநாட்டை தொடர்ந்து நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோர் பங்கேற்றனர்.

 இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர்.

 மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்டார்ட்அப், ஆராய்ச்சி மற்றும் புதுமைத்துறை ஆணையர் எகதெரினா ஜஹாரியேவாவை சந்தித்து, பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்கள், புதுமை மையங்கள், ஸ்டார்ட்அப் வளர்ச்சி மற்றும் Horizon Europe திட்டத்தில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.

 அதேபோல், சர்வதேச கூட்டாண்மைக்கான ஐரோப்பிய ஆணையர் ஜோசெஃப் சிகேலாவை சந்தித்த ஜெய்சங்கர், இணைப்பு திட்டங்கள், முத்தரப்பு கூட்டாண்மை, இந்தியாமத்திய கிழக்குஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) மற்றும் பசுமைக் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version