Close Menu
    What's Hot

    தனியார் கைக்கு செல்கிறதா டாஸ்மாக்? அமைச்சர் சொன்னது என்ன? மீண்டும் கிளம்பிய சர்ச்சை!

    2026 காமன்வெல்த் போட்டி நிறைவு.. வரலாறு படைத்த தருணங்கள்!

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஐபிஎல்2025: பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!
    Featured

    ஐபிஎல்2025: பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2025Updated:May 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rcb
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இது இரண்டாவது முறையாகும்.

    டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு:

    பஞ்சாப் மாநிலம் முல்லான்பூர் நகரில் நடைபெற்ற இந்த முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில், லீக் போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

    பஞ்சாப் திணறல் பேட்டிங்:

    முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியன்ஷ் ஆர்யா – பிரப்சிம்ரன் சிங் ஜோடி, நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான தொடக்கத்தை அளித்து வந்த நிலையில், இந்தப் போட்டியில் தடுமாறியது. பெங்களூரு அணியின் யாஷ் தயாள் பந்துவீச்சில், பிரியன்ஷ் ஆர்யா வெறும் 7 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து, 18 ரன்கள் சேர்த்த பிரப்சிம்ரன் சிங், புவனேஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அணிக்குத் திரும்பிய ஹேசில்வுட் பந்துவீச்சில் வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் ஜோஷ் இங்கிலீஸ் வெறும் 4 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். மார்கஸ் ஸ்டெய்னிஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 26 ரன்கள் சேர்த்தார். ஓமராசி 18 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த பஞ்சாப் அணி வெறும் 101 ரன்களை மட்டுமே எடுத்தது.

    பெங்களூருவின் அசத்தல் பந்துவீச்சு:

    பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார் மற்றும் ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    மிரட்டிய பில் சால்ட் – பெங்களூரு வெற்றி:

    பின்னர் 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு தொடக்க வீரர்கள் விராட் கோலி, பில் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். விராட் கோலி 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமிசன் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 19 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய பில் சால்ட், பஞ்சாப் அணியின் பந்துவீச்சைத் துவம்சம் செய்தார். அவர் வெறும் 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஜத் படிதார் சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சுயாஷ் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை பெங்களூரு பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 2016-ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு அணி, அப்போது தோல்வியைத் தழுவியது. இந்தமுறை “ஈ சாலா கப் நம்தே” என்ற முழக்கத்தை பெங்களூரு அணி உண்மையாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ipl 2025 rcb
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: அவதூறு வீடியோக்களுக்கு எதிராக பொள்ளாச்சி ஜெயராமன் ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழக்கு!
    Next Article “அன்புமணியை அமைச்சராக்கியது நான் செய்த தவறு” |Anbumani Vs Ramadoss
    Editor TN Talks

    Related Posts

    தனியார் கைக்கு செல்கிறதா டாஸ்மாக்? அமைச்சர் சொன்னது என்ன? மீண்டும் கிளம்பிய சர்ச்சை!

    August 3, 2026

    2026 காமன்வெல்த் போட்டி நிறைவு.. வரலாறு படைத்த தருணங்கள்!

    August 3, 2026

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தனியார் கைக்கு செல்கிறதா டாஸ்மாக்? அமைச்சர் சொன்னது என்ன? மீண்டும் கிளம்பிய சர்ச்சை!

    2026 காமன்வெல்த் போட்டி நிறைவு.. வரலாறு படைத்த தருணங்கள்!

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.