ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது. ஈரானை தொடர்ந்து கியூபா மீது கவனம் செலுத்தி வருகிறது இஸ்ரேல். ஈரான் சரணடைவதை தவிர வேறு வழியில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 இருப்பினும் ஈரான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்து வருகிறது. அதே நேரம் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை வேகப்படுத்தி வருகிறது. ஒரே நேரத்தில் அதிகமான போர் விமானங்களை ஈரானுக்கு அனுப்பி, புதிய வகையான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 ஈரானின் உள்கட்டமைப்பை குறிவைத்து இந்த விமானங்கள், அலை, அலையாக தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தலைநகர் டெஹ்ரான் மற்றும் இஸ்பஹான் நகரில் உள்ள உட்கட்டமைப்புகளை சேதப்படுத்தி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இஸ்பஹான் நகரில் உள்ள 80 வீடுகள் சேதமடைந்துள்ளது. டெஹ்ரான் அருகே மெஹ்ராபாத் விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version