முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்து வருகிறது.

இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பிரபல சினிமா டிக்கெட் முன்பதிவு செயலியான ‘District’-ல், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஜூன் 19 என்று குறிப்பிடப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22-ம் தேதி வரவிருக்கிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே (வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை) படத்தை உலகளவில் ரிலீஸ் செய்யப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் சில தாமதங்களுக்குப் பிறகு, தற்போது ஜூன் மாத வெளியீட்டிற்குப் படம் தயாராகி வருவதாகக் கூறப்படுவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version