Close Menu
    What's Hot

    ஒரு கையுடன் சைக்கிள் பயணம்…  67 ஆயிரம் கி.மீ. சாதனை படைத்த மாற்றுத்திறனாளி தமீம் அன்சாரி!

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்?
    Featured

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்?

    Editor web2By Editor web2July 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Money
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.4,000 ஆக உயர்த்தும் அறிவிப்பு, வரும் மாநில பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜெ. முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டையில் அரசுத் துறைகள் சார்பில் 721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெ. முகமது பர்வேஸ் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உரிய காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.

    அதன் அடிப்படையில், தற்போது வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.4,000 ஆக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும், தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் அரசிடம் இருப்பதாகவும், மாவட்டந்தோறும் அதிகாரிகள் கணக்கெடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

    சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    அதேபோல், தேயிலைத் தோட்ட நல வாரிய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர்  பர்வேஸ் கூறினார்.

    JoblessGraduates MohamedParvez TamilNaduBudget TamilNaduGovernment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: சாம்பியன் பட்டத்திற்காக அர்ஜென்டினா – ஸ்பெயின் இன்று மோதல்!
    Next Article “அம்பேத்கரை வணங்கிவிட்டு அவரது கொள்கைகளை காலி செய்கிறது பாஜக”
    Editor web2
    • Website

    Related Posts

    ஒரு கையுடன் சைக்கிள் பயணம்…  67 ஆயிரம் கி.மீ. சாதனை படைத்த மாற்றுத்திறனாளி தமீம் அன்சாரி!

    July 19, 2026

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    July 19, 2026

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரு கையுடன் சைக்கிள் பயணம்…  67 ஆயிரம் கி.மீ. சாதனை படைத்த மாற்றுத்திறனாளி தமீம் அன்சாரி!

    “தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே 75% வேலை” – சட்டம் கொண்டுவர அன்புமணி வலியுறுத்தல்!

    மாற்றுத்திறனாளிகள் நலனில் முன்னெடுப்பு… மதுரையில் ஒன்றிய அரசின் ALIMCO-வின் கிளை அலுவலகம் ….  சு.வெங்கடேசன் எம்.பி மகிழ்ச்சி

    போலீஸை கத்தியால் வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு… நாட்டு வெடிகுண்டு தயாரித்த சதி அம்பலம்!

    FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.