மிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.4,000 ஆக உயர்த்தும் அறிவிப்பு, வரும் மாநில பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜெ. முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அரசுத் துறைகள் சார்பில் 721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெ. முகமது பர்வேஸ் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் உரிய காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.

அதன் அடிப்படையில், தற்போது வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.4,000 ஆக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கான அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் அரசிடம் இருப்பதாகவும், மாவட்டந்தோறும் அதிகாரிகள் கணக்கெடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், தேயிலைத் தோட்ட நல வாரிய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர்  பர்வேஸ் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version