Close Menu
    What's Hot

    17 வருட மேஜிக்!. அன்று மெஸ்ஸி கையில் இருந்த குழந்தை.. இன்று உலகக்கோப்பையில் முதல் கோல் அடித்து அசத்தல்!

    நீட் மறுதேர்வு வினாத்தாளும் கசிந்ததா..?? வைரலாகும் வீடியோவுக்கு என்.டி.ஏ. பதில்..!!

    புதுச்சேரி : அரசு மருத்துவர்கள் போராட்டம்..! நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஃபேஸ்புக், இன்ஸ்டா போல இனி வாட்ஸ்அப்பிலும் ‘க்ரீன் டாட்’.. புதிய ஸ்டோரேஜ் டூல்களுடன் அதிரடி அப்டேட்!
    Featured

    ஃபேஸ்புக், இன்ஸ்டா போல இனி வாட்ஸ்அப்பிலும் ‘க்ரீன் டாட்’.. புதிய ஸ்டோரேஜ் டூல்களுடன் அதிரடி அப்டேட்!

    Editor web3By Editor web3June 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    whatsapp green dot
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், ஆண்ட்ராய்டு பயனர்களின் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில் இரண்டு புதிய முக்கிய அப்டேட்களைச் சோதித்து வருகிறது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்ற ‘கிரீன் ஆன்லைன் இண்டிகேட்டர்’ (Green Online Indicator) மற்றும் மேம்படுத்தப்பட்ட ‘பேக்கப் மேனேஜ்மென்ட்’ (Backup Management) ஆகிய வசதிகளை கொண்டுவர சோதிக்கப்பட்டு வருகிறது,

    தற்போது நாம் ஒருவருடன் சாட் செய்யும் போது மட்டுமே அவர் ஆன்லைனில் இருக்கிறாரா என்பது தெரியவரும். ஆனால், இனி ஒரு பயனர் வாட்ஸ்அப் செயலியில் ஆக்டிவாகஇருந்தால், அவரது சுயவிவரப் படத்தின்  அருகில் சிறிய பச்சை நிறப் புள்ளி தோன்றும்.

    இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா (Android Beta version 2.26.24.5) பதிப்பில் சோதிக்கப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே இருக்கும் இந்த வசதி, இனி வாட்ஸ்அப்பிலும் வரவுள்ளது. இதனால் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும் முன்பே அவர் ஆன்லைனில் இருக்கிறாரா என்பதை எளிதாக அறிய முடியும்.

    பயனர்களின் பிரைவசி அமைப்புகளுக்கு ஏற்பவே இந்த கிரீன் டாட் செயல்படும் என்பதால், ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைத்து வைப்பவர்களுக்குப் பாதிப்பு இருக்காது. எதிர்காலத்தில், சாட்டின் உள்ளே இருக்கும் “Online” என்ற எழுத்து வடிவத்திற்குப் பதிலாக இந்த பச்சை புள்ளி மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

    வாட்ஸ்அப் பயனர் தரவுகளைச் சேமிப்பதில் உள்ள சிரமங்களைக் குறைக்க, ஒரு பிரத்யேக பேக்கப் மேனேஜ்மென்ட் பகுதியை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் தற்போதைய பேக்கப் நிலையைச் சரிபார்க்கலாம். தேவையில்லாத பழைய கோப்புகளை (Unused files) நீக்கலாம். தேவைப்பட்டால் பேக்கப் கோப்புகளின் நகல்களை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். இது மொபைல் ஸ்டோரேஜை திறம்பட நிர்வகிக்க உதவும்.

    ஆண்ட்ராய்டு பயனர்களின் வசதிக்காக கூகுள் நிறுவனமும் வாட்ஸ்அப்புடன் இணைந்து இதில் செயல்பட்டு வருகிறது. கூகுள் பிளே சர்வீசஸ் (Google Play Services version 26.23) அப்டேட் மூலம், பயனர்கள் தங்கள் மொபைலின் செட்டிங்ஸ்  பக்கத்திலிருந்தே நேரடியாக வாட்ஸ்அப் பேக்கப் ஆப்ஷன்களை அணுக முடியும். கூகுள் டிரைவ் வழியாக பேக்கப்களை நிர்வகிப்பதும், ஸ்டோரேஜ் கட்டுப்பாடுகளை மாற்றுவதும் இதன் மூலம் மிகவும் எளிதாகப் போகிறது.

    இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

    இந்த அம்சங்கள் அனைத்தும் தற்போது சோதனைக் கட்டத்திலும், உருவாக்க நிலையிலும் உள்ளதால், பொதுப் பயனர்களுக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. எனினும், சோதனைகள் முடிவடைந்தவுடன் விரைவில் இந்தியப் பயனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த புதிய அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Android users green dot new backup management Online Indicator whatsapp WhatsApp testing
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது அணை: புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்த தீர்வு – தங்கம் தென்னரசு..!!
    Next Article CM விஜய் பிறந்தநாள்..!! அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..!! அமைச்சர் ஸ்ரீநாத் மாஸ்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    17 வருட மேஜிக்!. அன்று மெஸ்ஸி கையில் இருந்த குழந்தை.. இன்று உலகக்கோப்பையில் முதல் கோல் அடித்து அசத்தல்!

    June 22, 2026

    நீட் மறுதேர்வு வினாத்தாளும் கசிந்ததா..?? வைரலாகும் வீடியோவுக்கு என்.டி.ஏ. பதில்..!!

    June 22, 2026

    புதுச்சேரி : அரசு மருத்துவர்கள் போராட்டம்..! நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்..!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    17 வருட மேஜிக்!. அன்று மெஸ்ஸி கையில் இருந்த குழந்தை.. இன்று உலகக்கோப்பையில் முதல் கோல் அடித்து அசத்தல்!

    நீட் மறுதேர்வு வினாத்தாளும் கசிந்ததா..?? வைரலாகும் வீடியோவுக்கு என்.டி.ஏ. பதில்..!!

    புதுச்சேரி : அரசு மருத்துவர்கள் போராட்டம்..! நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்..!

    மீண்டும்.. மீண்டுமா..!! பீகார் நீட் மறுதேர்வில் பரபரப்பு.. ஆள்மாறாட்ட மோசடியில் 30 பேர் கைது..!!

    CM விஜய் பிறந்தநாள்..!! அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..!! அமைச்சர் ஸ்ரீநாத் மாஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.