Close Menu
    What's Hot

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    கடலூர் : பாரில் ஏற்பட்ட தகராறு..! அண்ணா கல்லூரி முன் நடந்த வெறித்தனமான தாக்குதல்..!

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2 – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை!
    Featured

    ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2 – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 cinema
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் சினிமாவின் தரமான திரில்லர் படைப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச அளவில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

    ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (Shanghai International Film Festival – SIFF 2026)-வில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ‘காளிதாஸ் 2’ ஒன்றாகும்.

    சீனாவின் ஷாங்காயில் திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்ற இந்த விழாவில், இந்தியாவிலிருந்து சாதனை அளவில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் தென்னிந்தியாவிலிருந்து ஒரே ஒரு திரைப்படமாக ‘காளிதாஸ் 2’ இடம்பெற்றிருப்பது, படக்குழுவிற்கும் தமிழ்த் திரைப்பட உலகிற்கும் பெருமை சேர்த்துள்ளது.
    காளிதாஸ் திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். பரத் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அஜய் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    005 cinema 1

    இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மேலும் அரவிந்த் ஆனந்த் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.

    இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். ‘காளிதாஸ் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது.

    தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது, ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப தரத்திற்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. உலக திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சாதனை, தமிழ்ச் சினிமாவின் உலகளாவிய பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

    Asia Film Festival Film Festival Kalidas 2 Tamil Cinema
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article40 டிகிரி வெப்பத்தில் உருகும் UK சாலைகள்; 45 டிகிரியையும் அசால்ட்டாக தாங்கும் இந்திய சாலைகள்!. எப்படி?
    Next Article மயிலாடுதுறை : காதலர்கள் தற்கொலை விவகாரம்..! பையனின் பெற்றோர் சாலை மறியல்..!
    Editor TN Talks

    Related Posts

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    July 1, 2026

    கடலூர் : பாரில் ஏற்பட்ட தகராறு..! அண்ணா கல்லூரி முன் நடந்த வெறித்தனமான தாக்குதல்..!

    July 1, 2026

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தருமபுரி : மனைவி, மகளை நானே கொன்றுவிட்டேன்..! கடன் தொல்லை தாங்க முடியவில்லை..! தொழிலதிபரின் அதிர்ச்சி வீடியோ..!

    கடலூர் : பாரில் ஏற்பட்ட தகராறு..! அண்ணா கல்லூரி முன் நடந்த வெறித்தனமான தாக்குதல்..!

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    ”அதானி ஒப்பந்ததால் அழியப்போகும் ஜவ்வாது மலை…” – சீமான் எச்சரிக்கை

    வறுமை, வன்முறை, இனவெறியை வென்ற மெக்சிகோ நாயகன்!. உலகக் கோப்பையில் ஜொலிக்கும் ஜூலியன் குயினோன்ஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.