ஆப்பிள் ஐ-போன்களை தயாரிக்கும் பணி இந்தியாவில் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. எஸ் அண்ட் பி குளோபல் நடத்திய ஆய்வின் படி, கடந்தாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகும் ஐ-போன்கள் எண்ணிக்கை 3.1 மில்லியன் யூனிட்களாக உள்ளன. அதே ஆண்டில் அமெரிக்காவில் ஐ-போன் விற்பனை 75.9 மில்லியன் யூனிட்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூன் காலாண்டில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஐ-போன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படுபவையாக இருக்கும் என அப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் ஐ-போன்களை தயாரித்து வரும் நிலையில், அதனை நிறுத்தும்படி ஆப்பிள் நிறுவனத்திடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை விமர்சித்து நடிகையும், பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி அதை நீக்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என டிம் குக் வசம் ட்ரம்ப் சொன்னது தொடர்பாக நான் பதிவு செய்த ட்வீட்டை நீக்குமாறு தேசியத் தலைவர் நட்டா, என்னை தொடர்பு கொண்டார். அந்தப் பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் பதிவு இன்ஸ்டாவில் இருந்து நீக்கி விட்டேன்” என கங்கனா தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அவர் அமெரிக்க அதிபர். ஆனால் உலக அளவில் அதிகம் விரும்பப்படும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் ஆகியுள்ளார். ஆனால், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். ட்ரம்ப் ஆல்பா மேல் ஆக இருக்கலாம். ஆனால், நமது பிரதமர் ஆல்பா மேல்-களின் தந்தை”.

”இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட ரீதியிலான பொறாமையா அல்லது அரசாங்க ரீதியான பாதுகாப்பின்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என கங்கனா தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version