அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினரை தவெக அரசு அராஜகமாக கைது செய்திருப்பதாக கனிமொழி எம்.பி கடிந்துரைத்துள்ளார்.
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை தவெக அரசு அராஜகமாக கைது செய்திருப்பதாக கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
