கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு, கருணை அடிப்படையில் முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கரூர் வருகை தந்த முதலமைச்சர் விஜய், அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 31 பேரின் குடும்ப வாரிசுதாரர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதில், கணவரை இழந்த சாந்தி என்பவருக்கு பணி ஆணைக்கு பதிலாக ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கிய முதலமைச்சர், மற்றவர்களுக்கு வருவாய்த்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை மற்றும் பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், காவலர் மற்றும் மசால்ஜி போன்ற பணிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version