தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையை நாட தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

கீழடி நாகரீகத்தின் தொன்மை குறித்த ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், தனது முடிவுகளை மத்திய தொல்பொருள் துறையிடம், 2023-ஆம் ஆண்டு ஜனவரி வழங்கினார்.

ஆனால் அந்த அறிக்கையில், கீழடியின் தொன்மையை நிரூபிக்க அறிவியல் பூர்வ ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனக் கூறி ஆய்வு முடிவை ஏற்று வெளியிட மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

ஆனால், கீழடி நகரம் கி.மு. 500 ல் உருவானதாக கட்டுமான அடுக்குகள் , கரிம பகுப்பாய்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார் அமர்நாத் ராமகிருஷ்ணன். மேலும், கி. மு 5 முதல் கி.மு 1 ம் நூற்றாண்டு வரை கீழடி நகர நாகரீகம் செழிப்புற்று விளங்கியதாகவும் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

கி.மு 1 முதல் கி. பி 3 ம் நூற்றாண்டுக்குள் கீழடி நகரம் நலிவடைந்திருக்க கூடும் எனவும் தனது ஆய்வு முடிவுகளை அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்திருந்ததாகவும், கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடப்பட்டால் தமிழர் நாகரீகத்தின் தொன்மை தெரியவரும்  எனவும்  தொல்லியல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.

எனவே முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து மத்திய தொல்பொருள் துறையிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்திருப்பதாகவும், தமிழ்நாடு தொல்பொருள் துறையில் தகவல் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version