நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடரின் 43-அது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பு 225 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், 40 பந்துகளில் 75 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் முலம் 17வது முறையாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்தியர்கள்ல் ஜடேஜாவின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார். இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 21, விராட் கோலி 20, எம்.எஸ்.தோனி 18 என முதல் 3 இடங்களில் உள்ளனர்.
