ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அணியில் இளம் அதிரடி ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது விராட் கோலிக்கு வலது காலில் ‘ஹாம்ஸ்ட்ரிங்’ தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. இதற்குக் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், ஜூன் 13-ம் தேதி தர்மசாலாவில் தொடங்கவுள்ள ஆப்கன் ஒருநாள் தொடரிலிருந்து அவர் முழுமையாக விலகியுள்ளார்.

ரோஹித், ஹர்திக் நிலை என்ன? மறுபுறம், இந்திய அணியின் சீனியர் வீரரான ரோஹித் சர்மாவும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், அவர் இந்தத் தொடரில் விளையாடுவாரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் தனது உடற்தகுதித் தேர்வை  எதிர்கொண்ட பிறகே, அவர் விளையாடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதேபோல் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதியும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோலிக்கு மாற்று வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், சமீபகாலமாக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான ஃபார்மில் இருப்பதால், இந்த ஒருநாள் தொடரிலும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் வரவிருக்கும் இங்கிலாந்து தொடரைக் கருத்தில் கொண்டு, சீனியர் வீரர்களின் காயங்களை பிசிசிஐ மிகவும் கவனமாகக் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version