இந்தியாவில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தில் அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் ராஜினா செய்த உறுப்பினர் பதவி உள்பட 3 உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஜூன் 18ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறும் நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1ஆம் தேதியே தொடங்கியது.

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருர் பதவியை தவெக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளராக பிரவின் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டு அவர் முதலமைச்சர் முன்னிலையில் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளார்.

இதுவரை பிரவீன் சக்கரவர்த்தி உள்பட 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுத்தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

 தேர்தலில் போட்டியிட விரும்பி வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version