Close Menu
    What's Hot

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    தென்னிந்தியாவின் “இசையரசி” எஸ்.ஜானகி! காலத்தால் அழியாத கானக் குரல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!
    Featured

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

    Editor web1By Editor web1July 11, 2026Updated:July 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Janaki
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

    ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா எனும் ஊரில் 1938 ஏப்ரல் 23ம் தேதி ராமமூர்த்தி – சத்யவதி தம்பதிகளுக்கு பிறந்தார். தனது இசைப் பயணத்தின் பெரும்பகுதியைத் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் அவர் செலவழித்ததால், ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் தனது குரலால் கட்டிப்போட்ட பெருமைக்குரிய கலைஞராக எஸ்.ஜானகி திகழ்கிறார்.

    கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வந்த அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில், வயது மூப்பு காரணமாக பாடகி எஸ்.ஜானகி காலமானார்.

    1959-ல் வி.ராம்பிரசாத் என்பரை எஸ்.ஜானகி மணந்தார். 1997ல் அவர் ராம்பிரசாத் காலமானார். இவர்களது ஒரே மகன் முரளி கிருஷ்ணா. ஐதராபாத்தில் வசிக்கிறார். அவரது மனைவி உமா முரளிகிருஷ்ணா ஒரு பரதநாட்டிய, குச்சிப்புடி, நடனக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு வர்ஷா மற்றும் அப்சரா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    தனது தனித்துவமான குரல் வளத்தாலும், உச்சரிப்புத் தெளிவாலும் பல தசாப்தங்களாகத் திரையிசை உலகில் கோலோச்சியவர். 1957-ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகப் பாடி வரும் அவர், ஏறக்குறைய 17 மொழிகளில் தனது குரலைப் பதிவு செய்துள்ளார்.

    அவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எஸ்.ஜானகியின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூலை 24-ல் வெளியாகிறது விஜயின் ‘ஜனநாயகன்’? திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்குத் தயார்!
    Next Article தென்னிந்தியாவின் “இசையரசி” எஸ்.ஜானகி! காலத்தால் அழியாத கானக் குரல்!
    Editor web1
    • Website

    Related Posts

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    July 11, 2026

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    July 11, 2026

    தென்னிந்தியாவின் “இசையரசி” எஸ்.ஜானகி! காலத்தால் அழியாத கானக் குரல்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எஸ்.ஜானகி மறைவுக்கு ரஜினி, கமல், வைரமுத்து இரங்கல்!

    4 முறை தேசிய விருது பெற்றவர் எஸ்.ஜானகி!

    தென்னிந்தியாவின் “இசையரசி” எஸ்.ஜானகி! காலத்தால் அழியாத கானக் குரல்!

    பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்!

    ஜூலை 24-ல் வெளியாகிறது விஜயின் ‘ஜனநாயகன்’? திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்குத் தயார்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.