Close Menu
    What's Hot

    அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை!- பள்ளித் தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!

    30 வினாடியில் 195 முத்தங்கள்! கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் ஜோடி!.

    4.3 கோடி மக்கள் அஞ்சலி: நெகிழ்ச்சியுடன் நிறைவடைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தேர்தல் வழக்குகள்: உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!
    Featured

    தேர்தல் வழக்குகள்: உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    Editor web1By Editor web1July 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    HC
    xr:d:DAExLu9lenQ:8214,j:1555290842974094122,t:24032808
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து, பல்வேறு முறைகேடுகள் மற்றும் காரணங்களைக் காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் வெவ்வேறு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு 5 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வேட்பாளர் மிலானி வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இதேபோல் கன்னியாகுமரி: அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் மகேஷ், ராயபுரம்: தவெக எம்.எல்.ஏ. விஜய் தாமு வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சுபேர் கான், குளித்தலை: திமுக எம்.எல்.ஏ. சூரியனூர் ஏ.சந்திரன் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் ஜி.பாலசுப்ரமணி, புதுக்கோட்டை: திமுக எம்.எல்.ஏ. வி.முத்துராஜா வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் கே.எம்.ஷெரீப் வழக்குகள் விசாரணைக்கு வந்தன:

    இந்த 5 வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஜி.அருள்முருகன், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

    நீதிபதி என்.செந்தில்குமார் அமர்வு முன்பு 6 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகளில் வெற்றி பெற்று, பின்னர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து தவெக மதியழகன் தாக்கல் செய்த வழக்கு, சி.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுகவின் கே.கே.செல்லப்பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தன.

    மேலும், லால்குடி: அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்டின் வெற்றியை எதிர்த்து திமுக பாரிவள்ளல், திருக்கோவிலூர்: அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பழனிசாமி வெற்றியை எதிர்த்து பரணி பாலாஜி, விழுப்புரம்: திமுக எம்.எல்.ஏ. ஆர்.லக்ஷ்மணன் வெற்றியை எதிர்த்து தவெக என்.மோகன்ராஜ், விக்கிரவாண்டி: பாமக எம்.எல்.ஏ. சி.சிவக்குமார் வெற்றியை எதிர்த்து தவெக ஏ.வியஜவடிவேல் ஆகியோரின் வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மனுதாரர்களுக்கு கால அவகாசம் வழங்கியதோடு, எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

    நீதிபதி டி.கோவிந்தராஜன் திலகவதி அமர்வு முன்பு 6 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. முன்னாள் அமைச்சர் மற்றும் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. சி.வி.கணேசன் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் ஏ.ராஜசேகர் தொடர்ந்த வழக்கு உட்பட 6 வழக்குகள் இந்த அமர்வில் விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.கோவிந்தராஜன் திலகவதி, மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அவகாசம் அளித்து, எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்குகளை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பூரில் கோர விபத்து!. லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழப்பு!
    Next Article 4.3 கோடி மக்கள் அஞ்சலி: நெகிழ்ச்சியுடன் நிறைவடைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு!
    Editor web1
    • Website

    Related Posts

    அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை!- பள்ளித் தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!

    July 10, 2026

    30 வினாடியில் 195 முத்தங்கள்! கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் ஜோடி!.

    July 10, 2026

    திருப்பூரில் கோர விபத்து!. லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழப்பு!

    July 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை!- பள்ளித் தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!

    30 வினாடியில் 195 முத்தங்கள்! கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் ஜோடி!.

    4.3 கோடி மக்கள் அஞ்சலி: நெகிழ்ச்சியுடன் நிறைவடைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு!

    தேர்தல் வழக்குகள்: உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    திருப்பூரில் கோர விபத்து!. லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.