நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு, கடந்த 2023 ஆம் ஆண்டு விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதில், நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கோரும் கல்வி நிறுவனங்கள், எந்த பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளதோ, அந்த பல்கலைக்கழகத்தின் ஆட்சேபம் இல்லா சான்று பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 நாட்களுக்குள் ஆட்சேபம் இல்லா சான்றை வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேபம் இல்லை என கருதி,  நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கோரி கல்வி நிறுவனம் அளித்த விண்ணப்பித்தை நடைமுறைபடுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை எதிர்த்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், யுஜிசி விதிகள் மாநில அரசின் கவுன்சிலிங் நடைமுறை, இட ஒதுக்கீடு நடைமுறை உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பாதிப்பை என்பதால், இந்த விதிகளை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version