தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம், பேசியதாவது:
- ராகுல்காந்தியிடம் விஜய் ஆதரவு கேட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் தவெக ஆட்சிக்கு ஆதரவளித்தது.
- தமிழ்நாட்டில் மதசார்பற்ற அணி இருக்கவேண்டும், நேர்மையான முதலமைச்சர் இருக்க வேண்டும். அந்த இரண்டையும் நாங்கள் சாதித்துள்ளோம்.
- செல்வப்பெருந்தகை தலைமையின்போது காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை மீட்டதும், கிராமக் காங்கிரஸ் கமிட்டிக்கான உறுப்பினர்களை தேர்தெடுத்ததும் முக்கியமான முயற்சி.
- விழுந்து கிடந்த காங்கிரஸை நிலை நிறுத்தியது அழகிரி காலகட்டத்தில்தான்.
- அதற்கு முன்பாக வீழ்ந்து கிடந்த காங்கிரஸை இவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசு ஆகியோர் தூக்கி நிறுத்தினர்.
- கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்று இரண்டு அமைச்சர்களைப் பெற்றிருப்பதன் மூலம் காங்கிரஸின் கனவு59 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேறி உள்ளது.
- தமிழ்நாடு காங்கிரஸைப் பொறுத்தவரை ஒரே அணிதான். அது ராகுல்காந்தி தலைமையிலான அணிதான்!
- ராகுல்காந்திக்காகத்தான் ஓட்டு, கூட்டம், வெற்றி எல்லாம். ராகுல்காந்தி தலைமையிலான அணியில் என்னை டாஸ் போட அனுப்பி வைத்துள்ளார்கள். முன்பு செல்வப்பெருந்தகை டாஸ் போட்டார்.
- காங்கிரஸைப் பொறுத்தவரை எங்களது கருத்துக்களை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் சொல்வோம். எங்களைச் சீண்டுபவர்களுக்கு அதே வேகத்தில் பதில் சொல்வோம்.
- அமைச்சரவையில் இருப்பதால் ஆளும்கட்சியை எதிர்த்து செயல்படுவது என்பதை மக்களே விரும்பமாட்டார்கள். அதே நேரம் மக்கள் பிரச்னைகளை அரசு முன்பு எடுத்துரைப்போம்.
- தேர்தலில் தோற்றுவிட்டதால் ஆட்சி மாறும் எனப் பேசுவது ஒரு குறைபாடுதான். காசு கொடுத்தோமே ஓட்டுப்போடவில்லையே என கலக்கம் இருக்கும். அதனால் அப்படித்தான் பேசுவார்கள்.
- அடுத்ததாக 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல், 6 மாதத்தில் இடைத்தேர்தல், 3 வருடத்தில் நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் தவெக கூட்டணியே வெற்றி பெறும்.
- தவெக ஆட்சியில் அமர்ந்து 45 நாட்களுக்குள் ஊழல் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக ஒவ்வொரு கட்சியும் ஊழலில் முன்னேறிவந்த நிலையில் இன்று மீட்டர் டவுனாகியுள்ளது. இந்த மாற்றத்தை மக்கள் வரவேற்கிறார்கள்.
