நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும் திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உரத்துக் குரலெழுப்புவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருந்தபடி, காணொலி வாயிலாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் எந்தவொரு புதிய சட்டமாக இருந்தாலும், அது மாநில உரிமைகளையும் நமது அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையில் அமைந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்பவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும் என்றார்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்திலும், காவிரி நீர் பகிர்விலும் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்க திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரலெழுப்புவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாக ஒவ்வொரு திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் செயல்படுவார்கள் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version