ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முல்லன்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் அது குறித்து மீம்ஸ்களைப் பறக்கவிடத் தொடங்கிவிட்டனர். அதற்கு முக்கியக் காரணம், தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் ஐபிஎல் பின்னணிதான்.

நடப்பு இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் இன்றைய போட்டியில் அறிமுக வீரராகக் களம் இறங்கியுள்ள மானவ் சுதார் உட்பட மொத்தம் 6 வீரர்கள் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர்கள் ஆவர். ஒரே நேரத்தில் இத்தனை குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள், “என்னடா இது… இந்திய அணிக்குள்ள ஒரு ‘மினி ஜிடி’ அணியே விளையாடுது!” என்று சமூக ஊடகங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர், “கேப்டன் சுப்மன் கில் தனது ‘சொந்த ஜிடி கோட்டாவில்’ தன் அணி வீரர்களுக்கு வாரி வழங்கி வாய்ப்பளித்திருக்கிறார்” என்று ஜாலியாக கிண்டலடித்து, இந்த சுவாரஸ்யமான பிளேயிங் லெவனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version