துரை மருத்துவக் கல்லூரி அரங்கில் அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா, இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்லாணை, கோபிசன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக அழைப்பிதழிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அமைச்சர் நிர்மல்குமாருக்கு அடுத்தடுத்த அரசு நிகழ்ச்சிகள் இருந்ததால், திட்டமிட்ட நேரத்திற்கு சுமார் 10 நிமிடங்கள் முன்னதாகவே காலை 9.50 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வந்தார்.

ஆனால், அப்போது மேடையில் விழா ஏற்பாட்டாளர்கள், சங்க நிர்வாகிகள், அழைக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் என முக்கிய பிரமுகர்கள் யாரும் வராத நிலையில், பின்னணியில் தவெக கட்சிப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

மேடைக்கு விரைந்து சென்ற அமைச்சர், அங்கு யாரும் இல்லாததை பார்த்ததும் அப்செட் ஆனார். அவரிடம், “இன்னும் சில நிமிடங்களில் எம்.எல்.ஏ.க்களும், சங்க நிர்வாகிகளும் வந்து விடுவார்கள்” என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால், தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததால், காத்திருக்க முடியாது எனக் கூறிய அமைச்சர் நிர்மல்குமார், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு, மேடையில் அமராமலும், குத்துவிளக்கு ஏற்றாமலும், அரங்கில் இருந்தவர்களுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதனால், அமைச்சர் பங்கேற்பார் என எதிர்பார்த்திருந்த விழாவில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அமைச்சர் நேரத்திற்கு முன்பாக வந்ததும், நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழுமையாக தயாராக இல்லாததும் இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version