பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்திருந்த மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தீர்வு காணும் வகையில் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்….
கிணத்துக்கடவு பகுதியில் அதிக அளவில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் முறைகேடாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் கனிமவளத்துறை அதிகாரிகள் ட்ரோன்கேமரா வாயிலாக முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். முறைகேடாக செயல்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளது . தொடர்ந்து ஆய்வு செய்து பிரச்சினைகள் சரி செய்யப்படும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பல மதுபான கடைகளில் கூட்ட நெரிசல் காரணமாக மது வழங்கும் கவுண்டர்களில் விற்பனையாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். மதுக் கூடங்களில் ஆங்காங்கே பாட்டில்கள் குப்பைகள் சிதறி கிடக்கிறது. சிலர் மது போதையில் படுத்து கிடக்கின்றார்கள். இந்த நிலை தொடர கூடாது, சீரமைக்க வேண்டும் என தான் இந்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த பிரச்சனையை தீர்வு காணும் வகையில் நடத்தப்பட்ட விவாதத்தில் உணவகத்துடன் கூடிய மதுபான கடைகளை செயல்படுத்தலாமா? தனியார் மயமாக்கலாமா? அரசு மதுபான கடைகளில் கட்டமைப்புகளை மாற்றி அமைக்கலாமா? டாஸ்மார்க் கடைகளை முற்றிலும் மூடி விடலாமா என விவாதிக்கப் பட்டது. அதில் உணவகத்துடன் கூடிய மதுபான கடை என்பதை மட்டும் பெரிதுபடுத்தி விட்டார்கள். மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் திட்டமும் கலந்துரையாடலில் உள்ளது.
ஜனநாயகம் திரைப்படம் பார்ப்பதற்காக லீவு கேட்கவில்லை. முன்னாள் அமைச்சர்கள் MLAக்கள் எல்லாம் சட்டசபையில் எம்ஜிஆர் பாடல்கள் பாடியுள்ளனர்.
அவர்கள் பாடினால் ஏற்றுக் கொள்ளும் நீங்கள் எங்களை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? எங்களுக்குள்ளும் ஒரு உணர்வு இருக்கும், அது என்றும் எங்கள் தளபதி தான் என தெரிவித்தார்.
