இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களுக்குத் தரிசனம் செய்ய வருகை தரும் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தங்களது வருகை நேரம் குறித்த விவரங்களை ஒரு நாளைக்கு முன்னதாகவே கோயில் அலுவலகத்திற்குத் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு முக்கிய பிரமுகர்கள் வருகை தரும்போது, கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கோ அல்லது காணொளி பதிவு செய்வதற்கோ எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகை தரும் விஐபிக்களால் சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படாத வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்து ஒழுங்குபடுத்த வேண்டும்.
கோயில்களின் புனிதத் தன்மையும், அவற்றின் மரபு சார்ந்த ஒழுங்குமுறைகளும் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது என்பதால், இந்த நடைமுறையை அனைத்துக் கோயில்களிலும் உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்று ஆணையர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

