Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»எனக்கு கெடு விதிக்க முடியாது; ராஜினாமாவை ஏற்றதில் எனது முடிவே இறுதியானது”!. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!
    Featured

    எனக்கு கெடு விதிக்க முடியாது; ராஜினாமாவை ஏற்றதில் எனது முடிவே இறுதியானது”!. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

    Editor web3By Editor web3May 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    J.C.D prabhakar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “ராஜினாமா கடிதம் முறையாக இருந்தால் மட்டுமே அதனை ஏற்பேன்; எனது முடிவை அறிவிக்குமாறு யாரும் எனக்குக் கெடு விதிக்க முடியாது” என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    அதிமுக எம்எல்ஏக்கள் சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் நேற்று ராஜினாமா செய்த நிலையில் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகள் காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் பதவியை ராஜினாமா செய்தார். தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்திற்கு நேரில் வந்த அவர், தனது கைப்பட எழுதி எடுத்து வந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

    இசக்கி சுப்பையாவின் ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அதிமுகவினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி தந்தார். “ஒரு சட்டமன்ற உறுப்பினரின் ராஜினாமா கடிதம் சட்டவிதிகளின்படி முறையாக இருந்தால், அதனை ஏற்றுக்கொள்வதுதான் சபாநாயகரின் கடமை. இந்த விவகாரத்தில் எனது முடிவை உடனடியாக அறிவிக்குமாறு யாரும் எனக்குக் கெடு  விதிக்க முடியாது. ராஜினாமாவை ஏற்பதில் சபாநாயகராகிய எனது முடிவே இறுதியானது.

    நான் எப்போதும் சட்டமன்றப் பேரவையின் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே நடுநிலையாகச் செயல்படுவேன். யாரையும் பழிவாங்கும் இடமாக சபாநாயகர் அலுவலகம் ஒருபோதும் செயல்படாது. எனவே, இந்த விவகாரத்தில் அதிமுகவினர் முன்வைக்கும் அரசியல் வாதங்களைப் பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை.”

    எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் ராஜினாமா செய்ததற்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அளிக்கப்பட்ட மனு குறித்துப் பேசிய சபாநாயகர், அந்த மனு மீதான சட்டப்பூர்வ விளக்கத்தை உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு பின்னர் விரிவாகத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்கிறதா..?? அடுத்த திட்டத்தில் களமிறங்கிய CM விஜய்!!
    Next Article பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி!
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.