Close Menu
    What's Hot

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“அரசை விமர்சிப்பவர்களை யாரையும் கைது செய்யக் கூடாது என்றால் ஆட்சி நடத்த முடியாது” – திருநாவுக்கரசர்
    Featured

    “அரசை விமர்சிப்பவர்களை யாரையும் கைது செய்யக் கூடாது என்றால் ஆட்சி நடத்த முடியாது” – திருநாவுக்கரசர்

    Editor web2By Editor web2July 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thirunavu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசை விமர்சிப்பவர்களை எந்தச் சூழலிலும் கைது செய்யக் கூடாது என்று கூறினால், எந்த அரசாலும் ஆட்சியை நடத்த முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மெயின்காட்கேட்டில் உள்ள அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருநாவுக்கரசர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    தமிழகத்தில் தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தேர்தலுக்குப் பின் மற்றொரு கூட்டணி அமைவது புதிதல்ல என்றும், கடந்த 60 ஆண்டுகளாக இதுபோன்ற அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார். பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில் பிற கட்சிகளை உடைத்து ஆட்சி அமைக்கும் சம்பவங்களும் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

    தேர்தல் கூட்டணிகள் மாறியவுடன் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பது பொதுமக்களுக்கு எந்த நன்மையையும் தராது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி வேண்டாம் என்ற மக்கள் மனநிலையின் வெளிப்பாடாகவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலாக திமுக ஆட்சியைப் பற்றி தனியாக சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

    டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அரசுகள் ஜனநாயக முறையிலேயே எதிர்கொள்ள வேண்டும் என்றார். அதேபோல், அரசியல் விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியிலான பதில்தான் வழங்கப்பட வேண்டும் என்றும், விமர்சனங்களும் உண்மையானதாகவும் பொறுப்பானதாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதேநேரத்தில், “அரசை விமர்சனம் செய்பவர்களை யாரையும் கைது செய்யக் கூடாது என்று கூறினால், யாராலும் ஆட்சியை நடத்த முடியாது. சட்டம்-ஒழுங்கு தொடர்பான நடவடிக்கைகள் ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியைப் பொறுத்தே மதிப்பிடப்பட வேண்டும்” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

    மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு யாரேனும் சென்றால் அதைத் தடுக்க முடியாது என்றும், தமிழகத்தில் சில துறைகளில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    congress TamilNaduPolitics Thirunavukkarasar TrichyNews
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநான் நல்லா இருக்கேன்.. என்னை டிஸ்சார்ஜ் பண்ணுங்க.. பேரணியில் பங்கேற்கணும்..!! வாங்சுக் வேண்டுகோள்!
    Next Article அனிதா ராதாகிருஷ்னணை தள்ளிய போலீஸ்…காவல் துறையினருடன் மல்லுக்கட்டிய திமுகவினர் – தூத்துக்குடியில் களேபரம்!
    Editor web2
    • Website

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    July 21, 2026

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைக்கும் ‘கட்டா குஸ்தி 2’: உலகளவில் ரூ. 55 கோடியைக் கடந்தது!

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    CJP போராட்டத்தை நசுக்க பாஜக – காங்கிரஸ் நாடகம்- ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.