Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இனி டைம் வேஸ்ட் ஆகாது!.130 கி.மீ வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடிவு!.
    Featured

    இனி டைம் வேஸ்ட் ஆகாது!.130 கி.மீ வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடிவு!.

    Editor web3By Editor web3June 6, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Indian Railways plans
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடு முழுவதும் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரயில்களின் வேகத்தை மணிக்கு 110 கிலோமீட்டரிலிருந்து 130 கிலோமீட்டராக உயர்த்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

    இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் ரயில்களின் பயண நேரம் கணிசமாகக் குறைவதோடு, ஆண்டுக்கு சுமார் 40 முதல் 45 கோடி பயணிகள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முதற்கட்டமாக, நவீன ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எச்.பி (LHB) பெட்டிகளுடன் இயங்கும் 350 முதல் 400 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த பெட்டிகள் 160 கி.மீ வேகம் வரை பாதுகாப்பாகச் செல்லும் திறன் கொண்டவை.

    தற்போது ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் மற்றும் துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்கள் மட்டுமே 130 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. இனி சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களும் இந்த வேகத்தில் இயங்கவுள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளுக்கு, இந்த வேக அதிகரிப்பு மூலம் பயண நேரத்தில் பல மணி நேரம் மிச்சமாகும்.

    இந்த அதிவேக ரயில் இயக்கத்தை சாத்தியமாக்க, இந்திய ரயில்வே நாடு முழுவதும் விரிவான ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. அந்தவகையில்,  தண்டவாளங்கள் பலப்படுத்தப்பட்ட, நவீன மின்னணு இன்டர்லாக்கிங் (Electronic Interlocking) சிக்னல் சிஸ்டம் அமைக்கப்பட்ட பாதைகள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

    வேகம் அதிகரிப்புக்கு ஏற்ப, ரயில்கள் வந்து செல்லும் நேரங்களை மாற்றி அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இது ரயில்களின் துல்லியமான இயக்க நேரத்தை மேம்படுத்தும்.

    இந்த வேகம் உயர்வு என்பது இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கடந்த சில ஆண்டுகளாக, வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம், ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு, அதிவேக சரக்கு வழித்தடங்கள் மற்றும் 100% மின்மயமாக்கல் போன்ற பல்வேறு திட்டங்களில் ரயில்வே துறை பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது.

    இனி சாதாரண கட்டணத்தில் பயணிக்கும் நடுத்தர மக்களும் பிரீமியம் ரயில்களின் வேகத்தில், மிகக் குறைந்த நேரத்தில் தங்கள் இலக்கை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇழுத்தடிக்கும் ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் : வட்டியுடன் பணத்தை திருப்பியளிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு..!
    Next Article தகாத உறவில் இருந்த மனைவியை காயப்படுத்திய கணவர் – மகனுடன் வீடியோ வெளியிட்ட தந்தை-  மூவரும் நலம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    June 8, 2026

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    June 8, 2026

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.