72-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர்கள் மம்மூட்டி, தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, எடிட்டர் கலைவாணன் ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நால்வரும் தற்போது ஓம் படத்தில் ஒன்றினைந்துள்ளனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ஓம். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

ஸ்ரீ லீலா மற்றும் பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் அக்டோபர் 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ஓம்படத்தில் மம்மூட்டிகார்த்திகேயன்என்ற பெயரில் மிக கம்பீரமான ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். இது ஒரு கௌரவமான மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓம் படத்தின் படத்தொகுப்பு பணியினை கலைவாணன் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் தேசிய விருது பெற்ற நடிகர்கள் மம்முட்டி தனுஷ் மற்றும் எடிட்டர் கலைவாணன், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோருக்கு ஆகியோருக்கு கேக் வெட்டி ஓம் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version